கோவையில் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி பிரிவில், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்டம் சார்பில் வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், மத்திய அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினரிடம் இந்துமுன்னணியினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்தனர்.

இதனையடுத்து இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி, தமிழகம் முழுவதும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதி அளித்தது.

இதன் அடிப்படையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தம் அருகே இந்து முன்னணி கோவை வடக்கு மாவட்டம் சார்பில் இன்று மாலை 3 மணி அளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கி, 4 மணிக்குள் முடிவடைந்தது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் உருவை பாலன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், "மத ரீதியாக பங்களாதேஷ் நாட்டில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். அவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை மத்திய அரசு நிச்சயம் ஏற்படுத்தி தர வேண்டும். இந்து கோவில்கள் உடைக்கப்படுகின்றன. அங்குள்ள இந்து மத குழந்தைகள், பெண்கள் ஆகியோர் பாதுகாப்பு இன்றி தவிக்கின்றனர்" என்று கூறி கையில் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுசெயலாளர் தியாகராஜன், செய்தி தொடர்பாளர் ஜெய்கார்த்திக், மாவட்ட செயலாளர் படையப்பா (எ) முத்துகுமார், மாவட்ட பொருளாளர் அசோக், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தம்பி சரவணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இந்துமுன்னணியினர், இந்து ஆட்டோ முன்னணியினர் கலந்துக்கொண்டனர். இறுதியில் இந்து ஆட்டோ முன்னணி விஷ்ணு நன்றி கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...