பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் குடியிருப்புகளில் இரவில் உலா வரும் சிறுத்தைகள்: பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் குடியிருப்புகளில் இரவு நேரத்தில் சிறுத்தைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினரிடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு நடுவே சிறுத்தைகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பரம்பிக்குளம் பகுதியில் இரவு நேரத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே சிறுத்தைகள் உலா வருகின்றன. சிறுத்தைகள் பரம்பிக்குளம் விருந்தினர் மாளிகை அருகே உலா வருவது குறித்து வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு அருகே சிறுத்தைகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தைகளை விரட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "பரம்பிக்குளம் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...