சூலூரில் 10 செண்ட் அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைப்பு

கோவை மாவட்டம் சூலூரில் 10 செண்ட் அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்தது. இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் நன்றி தெரிவித்தது. நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க கோரிக்கை.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் வட்டம் மார்க்கெட் ரோட்டில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள சூலூர் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள அரசு நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்துள்ளது.



இந்த நிலம் சூலூர் கிராம புல எண். 704/5 (பழைய புல எண்.422/15) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 400 சதுர மீட்டர் (10 செண்ட்) பரப்பளவு கொண்ட சர்க்கார் புறம்போக்கு நத்தம் நிலமாகும்.



இந்த நிலத்தில் மாவட்ட நிர்வாகம் வேலி அமைத்ததற்கு அப்பகுதி பொதுமக்கள் சார்பாக இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் நன்றி தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இடத்தை எதிர்காலத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும், இந்த இடம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்பதை தெரிவிக்கும் வகையில் உடனடியாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...