பொள்ளாச்சி ஒடையகுளம் நீர் பயனாளர் சங்கத் தேர்தல்: போட்டியின்றி தேர்வான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்

பொள்ளாச்சி ஒடையகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலில் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா வெற்றி சான்றிதழ்களை வழங்கினார்.


Coimbatore: பொள்ளாச்சி ஆழியாறு அணை பாசன திட்டத்தில் உள்ள குளப்பத்துக் குளம் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் ஒடையகுளம் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் மற்றும் நான்கு ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு விசாகபதி என்பவரும், ஆட்சி மண்டல உறுப்பினர் பதவிக்கு நீலகண்டன், சந்துரு, ராஜமாணிக்கம், கார்த்திகேயன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டவர்களை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், ஐந்து பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.



தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் ஆட்சி மண்டல உறுப்பினர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும் பொள்ளாச்சி சார் ஆட்சியருமான கேத்தரின் சரண்யா வழங்கினார்.



அவர் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...