டாக்டர் தவமணி தேவி பழனிசாமிக்கு எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது 2024

கோவையில் நடைபெற்ற பிரிட்ஜ்24 நிகழ்ச்சியில் டாக்டர் தவமணி தேவி பழனிசாமிக்கு கல்வித் துறைக்கான சிறப்பான சேவைக்காக எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது வழங்கப்பட்டது. அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் விருதை வழங்கினார்.


கோவை: கேஎம்சிஹெச் மருத்துவமனையின் துணைத்தலைவரும், டாக்டர் என்ஜிபி கல்வி நிறுவனங்களின் செயலாளருமான டாக்டர் தவமணி தேவி பழனிசாமிக்கு சிறப்பான கல்வி சேவைக்கான எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது 2024 வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர் தவமணி பழனிசாமி அவர்கள் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனையின் துணை தலைவராகவும், டாக்டர் என்ஜிபி கல்வி நிறுவனங்களின் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். 1990-ம் ஆண்டு துவக்கப்பட்ட டாக்டர் என்ஜிபி ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் மூலம், குழந்தைகள் மற்றும் பருவ வயதினருக்கான சிறப்பு மருத்துவராகவும் சேவையாற்றி வருகிறார்.

மருத்துவத் துறையில் அவரது நீண்ட அனுபவம், உலகத்தரமான வசதிகளுடன் தரமான கல்வி அளிப்பதற்காக பல்வேறு கல்வி நிறுவனங்களை துவக்க ஊக்கமளித்தது. தற்போது மருத்துவ அறிவியல், கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், ஆசிரியர் பயிற்சி, சிபிஎஸ்ஈ பள்ளி என 10 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 15,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி அவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, ஐசிடி அகாடமி (ICT Academy) சார்பாக எஜூகேஷன் சேஞ்ச் மேக்கர் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆதரவுடன், ஐசிடி அகாடமி நடத்திய பிரிட்ஜ்24 (BRIDGE 24) நிகழ்ச்சி கடந்த 20-ம் தேதி கோவை ஹோட்டல் லீ மெரியடினில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் டாக்டர் தவமணி தேவி பழனிசாமிக்கு இவ்விருதை வழங்கினார்.

இந்த விருது பற்றி கருத்து தெரிவித்த டாக்டர் தவமணி தேவி பழனிசாமி, "இந்த விருது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் கல்லூரிகளில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மாணவர்களுக்கு சென்றடையும் வகையில் உள்கட்டமைப்புகள் உள்ளன. இத்தகைய விருதுகள் கல்வித்தரத்தை உயர்த்தவும், மாணவர்களின் எதிர்கால தேவைகளை பூர்த்திசெய்யவும் தூண்டுகோலாக அமையும்" என்று கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...