உடுமலை அருகே மக்களுடன் முதல்வர் திட்டம் - எம்பி கே.ஈஸ்வரசாமி பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர்புதூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி எம்பி கே.ஈஸ்வரசாமி மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். பொதுமக்கள் பல்வேறு துறைகளில் மனுக்களை அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட குலவிளக்கம்மன் திருமண மண்டபத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் பொள்ளாச்சி தொகுதி எம்பி கே.ஈஸ்வரசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய செயலாளர் செழியன், மற்றும் உடுமலை வட்டாட்சியர் ஜஷ்வந்த்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடக்கி வைத்தனர்.



இந்த திட்டத்தின் கீழ், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், ராவணாபுரம், புங்கமுத்தூர் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வருவாய் துறை சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்தனர்.



அதிகாரிகள் மனுக்களின் தன்மையை ஆய்வு செய்த பின்னர், பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் மனுக்களை அளிக்க பொதுமக்களுக்கு வழிகாட்டினர்.

இந்த நிகழ்வில் தாசில்தார்களான சுந்தரம், விவேகானந்தன், கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பியூலா எப்சி பாய், சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...