பொள்ளாச்சி அருகே இலங்கை தமிழர் குடியிருப்புகள் இடியும் நிலை: சார் ஆட்சியரிடம் முறையீடு

பொள்ளாச்சி அருகே கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் 30 ஆண்டுகளாக வசிக்கும் இலங்கை தமிழர்கள், சிதிலமடைந்த குடியிருப்புகளால் பாதுகாப்பின்றி வாழ்வதாக சார் ஆட்சியரிடம் முறையீடு செய்துள்ளனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மற்றும் ஆழியாறு அணை பகுதியில் பொதுப்பணித்துறை மற்றும் மின்வாரியத் துறைக்குச் சொந்தமான குடியிருப்புகளில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 30 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இந்தக் குடியிருப்புகள் மிகவும் பழுதடைந்தும், சிதிலமடைந்தும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அனைவரும் உயிருக்கு அச்சம் கொண்டு வாழ்ந்து வருவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்கள் குடும்பத்தினருடன் மனு அளித்தனர். சுமார் 30 ஆண்டுகளாக மறுவாழ்வு முகாமில் வசிக்கும் தங்களுக்கு அரசு எவ்விதமான அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டனர்.

குடியிருப்புகள் அனைத்தும் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், அவற்றை சீரமைத்துத் தரக் கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் முறையிட்டனர். இந்த நிலையில், மாற்று குடியிருப்புகளை கட்டித் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...