உடுமலை தெற்கு ஒன்றிய பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை மண்டல பயிலரங்கம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்டம் உடுமலை தெற்கு ஒன்றியத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்த மண்டல பயிலரங்கம் நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி நடைபெற்ற இந்த நிகழ்வில் பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை தெற்கு ஒன்றியம் பள்ளபாளையம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உறுப்பினர் சேர்க்கை குறித்த மண்டல பயிலரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் உத்தரவுக்கிணங்கவும், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி அவர்களின் ஆலோசனைப்படியும் ஏற்பாடு செய்யப்பட்டது.



உடுமலை தெற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினரும் உறுப்பினர் சேர்க்கை மாவட்ட பொறுப்பாளருமான விஜயராகவன் மற்றும் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளரும் உடுமலை தெற்கு ஒன்றிய பொறுப்பாளருமான ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.



விஜயராகவன் மற்றும் ராதிகா ஆகியோர் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகளுக்கு விரிவான விளக்கம் அளித்தனர். பின்னர், நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதுடன், உறுப்பினர் சேர்க்கை படிவங்களும் விநியோகிக்கப்பட்டன.

இந்த மண்டல பயிலரங்கில் உடுமலை தெற்கு ஒன்றிய சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பாஜக நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...