கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: 62 வயது முதியவர் போக்சோவில் கைது

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் விளையாடிய 10, 11 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 10 மற்றும் 11 வயதுடைய இரு சிறுமிகள் விடுமுறை நாட்களில் வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் பள்ளி விடுமுறை விடப்பட்டும் அந்த சிறுமிகள் விளையாட செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் காரணம் கேட்டபோது, அருகில் வசிக்கும் 62 வயதான சுந்தரமூர்த்தி என்பவர் பாலியல் தொந்தரவு செய்வதாக சிறுமிகள் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சுந்தரமூர்த்தியின் மகனிடம் முறையிட்டனர். இதையடுத்து சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினர் வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டனர். ஆனால் நேற்று சுந்தரமூர்த்தி மீண்டும் அதே பகுதிக்கு தவறான நோக்கத்துடன் வந்ததாக தெரிகிறது. அவரை பார்த்த சிறுமிகள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

உடனடியாக பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் இந்திராணி சோபியா மற்றும் காவலர்கள், சம்பவ இடத்தில் சுற்றித்திரிந்த சுந்தரமூர்த்தியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் சுந்தரமூர்த்தி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும், மீண்டும் தவறான நோக்கத்துடன் வந்ததும் உறுதியானது. இதையடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...