நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பில் கோவை ஏஜேகே கல்லூரி முதலிடம்

கோவையில் பாரதியார் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நான் முதல்வன் திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதில் முதலிடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 766 கல்லூரிகளில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதில் கோவையில் பாரதியார் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

கோவை நவக்கரையில் அமைந்துள்ள ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழக அரசின் நான் முதல்வன் மதிப்புமிக்க திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதில் தமிழ்நாட்டில் உள்ள 766 கல்லூரிகளில் நான்காவது இடத்தையும் கோவை பாரதியார் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கல்லூரிகளில் முதலிடத்தையும் அடைந்து குறிப்பிடத்தக்க சாதனையை பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட நான்முதல்வன் திட்டம் திறன் மேம்பாடு மூலம் மாணவர்களுக்கு மதிப்புமிக்க வேலை வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாடுக்கழத்தின் நான் முதல்வன் அனைத்து கல்வி நிறுவன தலைவர்களுடன் மாநில அளவிலான கருத்தரங்கம் 29.8.2024 அன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் இன்னசென்ட் திவ்யா IAS அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நான் முதல்வன் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தில் வேலைவாய்ப்பு அளிப்பதில் கோவையில் ஏஜேகே கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு வேலை வாய்ப்புகளை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதில் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத முயற்சியைப் பாராட்டி இன்னசென்ட் திவ்யா IAS அவர்கள் சாதனைச்சான்றிதழை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...