அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்த கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம்

கோவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்த கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், பொற்கொல்லர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை வழங்கினர். அமைச்சர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


கோவை: கோவைக்கு வருகை தந்த தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனை இன்று (29.08.2024) கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (CAGJMA) தலைவர் ரகுநாதன் சுப்பையா (SR) மற்றும் செயலாளர் தண்டபாணி ஆகியோர் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, சங்கத்தினர் பொற்கொல்லர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கினர். சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், அமைச்சர் அன்பரசன் ஆர்வமுடன் பொற்கொல்லர்களின் பிரச்சினைகளையும், தங்க நகை தயாரிப்பு பற்றியும் கேட்டறிந்தார்.

பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததாக சங்கத்தினர் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த உறுதிமொழிக்கு CAGJMA சங்கத்தின் சார்பாக தலைவர் மற்றும் செயலாளர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...