கோவை மாநகராட்சி ஆணையர் தெற்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் தெற்கு மண்டலத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். குடிநீர், பாதாள சாக்கடை, சுகாதார நிலையம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.08.2024) தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

ஆணையர் முதலில் வார்டு எண் 89-ல் கோவைப்புதூர் விரிவாக்கப் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து, வார்டு எண் 98-ல் பாரத் புட்டுவிக்கி சாலை நகர் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார்.



வார்டு எண் 91-ல் குளத்துப்பாளையம் பாலக்காடு பிரதான சாலையில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைப் பணிகளையும் பார்வையிட்டார். குனியமுத்தூர் பகுதியில் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ரயில்வே பாதைகளுக்கு மேலே மற்றும் அடியில் பாலம் அமைத்து, குறிச்சி - குனியமுத்தூர் குடிநீர் திட்டம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

வார்டு எண் 90-ல் உள்ள கோவைப்புதூர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தடுப்பூசிகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார். மருந்து மற்றும் மாத்திரைகளின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.



அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்பிடத்தையும் பார்வையிட்டார்.

வார்டு எண் 97-ல் ஈச்சனாரி ஐயப்பா நகரில் பில்லூர் 3 குடிநீர் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணியையும் நேரில் ஆய்வு செய்தார்.



தெற்கு மண்டலத்தில் வார்டு எண் 79-ல் பேரூர் பிரதான சாலை, அண்ணா சிலை அருகில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, வார்டு எண் 89-ல் சுண்டக்காமுத்தூர் குட்டை,



வார்டு எண் 88-ல் குனியமுத்தூர் அரசு பணியாளர் காலனி பகுதியில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றையும் ஆணையர் பார்வையிட்டார்.

மேலும், வார்டு எண் 93-ல் உள்ள இடையர்பாளையம் மாநகராட்சி துவக்கப்பள்ளியை பார்வையிட்டு, பாடத்திட்டங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த ஆய்வின் போது துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி, வசந்தாமணி, முருகேசன், பாபு, இளஞ்சேகரன், செந்தில்குமார், உதயகுமார், அஸ்லாம்பாஷா, உதவி நகர திட்டமிடுநர் விஜயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...