உடுமலைப் பகுதியில் யானை தாக்கி மலைவாழ் மக்கள் படுகாயம் - அவசர சிகிச்சைக்கு போராட்டம்

உடுமலை அருகே யானை தாக்கியதில் மலைவாழ் மக்கள் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவசர சிகிச்சைக்கு தொட்டிலில் சுமந்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிகளுக்காக போராட்டம்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், திருமலை மலை கிராமத்தில் சாகுபடி பணிக்காக சென்ற குருமலை மலைவாழ் குடியிருப்பைச் சேர்ந்த வெங்கிட்டான் (50) என்பவரை காட்டு யானை தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மலைவாழ் மக்கள் காயமடைந்த வெங்கிட்டானை சிகிச்சைக்காக தொட்டிலில் கட்டி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இந்த சூழ்நிலையில், மலைவாழ் மக்கள் தங்களது அடிப்படை வசதிகள் குறித்து கவலை தெரிவித்தனர்.



மலைவாழ் மக்கள் தெரிவித்ததாவது, "அவசர அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாதை வசதியை ஏற்படுத்தித் தர கோரி தொடர்ந்து போராடி வருகின்றோம். ஆனால் இன்று வரையிலும் அதை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விபத்து மற்றும் அவசரகால உதவியைப் பெறுவதில் தடங்கல்கள் ஏற்படுகிறது. அப்போது சிகிச்சை பெறுவதற்கான பொன்னான நேரம் போராட்டத்திலேயே கழிந்து விடுவதால் உயிரிழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மலைவாழ் குடியிருப்புகளில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது," என்றனர்.

இதற்கிடையில், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெங்கிட்டானை உடுமலை வனச்சரகர் மணிகண்டன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், வனத்துறை சார்பில் முதல் கட்ட நிதியாக ரூ.10,000 வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...