கோவையில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்பி தொடங்கி வைத்தனர்

கோவையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் தொடங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் எம்பி கணபதி ராஜ்குமார் இவற்றைத் தொடங்கி வைத்தனர்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளுக்கான சாவிகளை வழங்கி தொடங்கி வைத்தனர்.

இந்த ஊர்திகள் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளன. கால்நடைகளுக்கு மருத்துவ வசதி எட்டாத கிராமங்களுக்கும் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இவை செயல்படும்.



திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து கிராமங்களுக்கும் இந்த வாகனங்கள் சென்று கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளன. மேலும், இந்த வாகனங்களில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள் செய்யும் வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மொத்தம் 1962 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முயற்சி கிராமப்புற கால்நடை உரிமையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...