வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் மழையில் தர்ணா: நகர மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட 16 பேர் போராட்டம்

வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கொட்டும் மழையில் நகர மன்ற துணைத் தலைவர் தா.மா செந்தில்குமார் உள்ளிட்ட 16 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வளர்ச்சிப் பணிகளை தடுக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலையீடு குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று நடைபெற்ற சாதாரண நகர மன்ற கூட்டத்திற்கு முன்னதாக, நகர மன்ற துணைத் தலைவர் தா.மா செந்தில்குமார் உள்ளிட்ட 16 பேர் கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வால்பாறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இதில் திமுக கட்சி உறுப்பினர்கள் 19 பேர், அதிமுக உறுப்பினர் ஒருவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் ஒருவர் ஆகியோர் உள்ளனர். இன்றைய கூட்டம் துவங்கும் முன்பு நகர மன்ற துணைத் தலைவர் தா.மா செந்தில்குமார் நகராட்சி அலுவலகம் முன்பு கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மற்ற நகர மன்ற உறுப்பினர்கள் 15 பேரும் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.



போராட்டக்காரர்கள் கூறியதாவது: "வால்பாறையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலையீடு தடுக்கிறது. மாதந்தோறும் நடைபெறும் நகர மன்ற கூட்டத்தில் அனைத்து வேலைகளையும் தீர்மானம் செய்து பணிகளை ஏலம் விடும்போது, அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இடையூறு செய்து பணிகளை ஏலம் விடுவதை ஐந்து முறை நிறுத்தி உள்ளனர்."

"இதனால் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய வளர்ச்சிப் பணிகளை செய்ய முடியாமல் உள்ளது. பொதுமக்கள் வார்டு உறுப்பினர்களிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். திமுக தலைவர் முதல்வர் வார்டு உறுப்பினர்களை சுதந்திரமாக மக்களுக்கு பணிகளை செய்ய கூறியுள்ள நிலையில், இந்த மாதிரி வளர்ச்சிப் பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்" என்று குற்றம்சாட்டினர்.

இந்தப் பிரச்சினையைக் கண்டித்து நகர மன்ற துணைத் தலைவர் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், நகராட்சி அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...