கோவையில் எச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு: பாஜக உறுப்பினர் சேர்க்கை, மத்திய அரசு திட்டங்கள் குறித்து விளக்கம்

கோவை விமான நிலையத்தில் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். கட்சி உறுப்பினர் சேர்க்கை, மத்திய அரசின் திட்டங்கள், தேர்தல் தயார்நிலை குறித்து விளக்கமளித்தார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, மத்திய அரசின் திட்டங்கள், தேர்தல் தயார்நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக பேசினார்.



எச்.ராஜா கூறுகையில், "மாநிலத் தலைவர் அண்ணாமலை கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தி அதன் தலைவராக தன்னை நியமித்த அகில இந்திய குழுவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அடுத்த மூன்று மாதங்கள் கட்சியில் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் புதுப்பித்தல் இயக்கமாக இருக்கும். ஒரு பூத்திற்கு 200 பேர் சேர்க்கப்பட வேண்டும் என்ற இலக்குடன், தமிழ்நாட்டில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் தமிழக மக்களின் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன," என்றார்.

தேர்தல் பட்டியல் திருத்தம் குறித்து பேசிய அவர், "கோயம்புத்தூர், மயிலாடுதுறை, தென் சென்னை போன்ற பல பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளன. எனவே, வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்ப்பதோடு, வாக்குரிமை உள்ள அனைவரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்," என்றார்.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த எச்.ராஜா, "மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக நிதி ஒதுக்கீடு செய்கிறது. தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, நீதிமன்றங்கள், தகவல் தொடர்பு வலையமைப்பு போன்றவற்றுக்கு மத்திய அரசே செலவிடுகிறது. இவை அனைத்தும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகின்றன," என்று விளக்கினார்.

பிரதமர் மோடியின் இளைஞர் வேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்தும் எச்.ராஜா பேசினார். "மூன்று லட்சம் கோடி ரூபாய் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும்," என்றார்.

நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நான் விஜயை விமர்சிக்கவில்லை. மெர்சல் படத்தில் சொல்லப்பட்ட தவறான தகவல்களை மட்டுமே சுட்டிக்காட்டினேன். விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்," என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...