பொள்ளாச்சி நகராட்சியின் அவசர கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றம்

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய ஆணையாளர் கணேசன் வரவேற்கப்பட்டார். கொசு ஒழிப்பு, கழிவுநீர் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் இன்று நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 70 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.



கூட்டத்தின் தொடக்கத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையாளர் கணேசனுக்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களைத் தவிர திமுக, மதிமுக உள்ளிட்ட 33 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.



கூட்டம் தொடங்குவதற்கு முன், மறைந்த திமுக கவுன்சிலர் பழனிச்சாமி மற்றும் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.



கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். கொசு தொல்லை அதிகரித்து வருவதால் கொசு மருந்து அடிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர். மேலும், நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த நகராட்சி ஆணையாளர் கணேசன், நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், காலியாக உள்ள பணியிடங்களுக்கு அலுவலர்களை நியமிக்குமாறு அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்து துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டபின் எந்த குறைகளும் இல்லாமல் பணிகள் நடக்கும் என்றும் உறுதியளித்தார்.

நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு விடும் பணிக்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கணேசன் தெரிவித்தார். இந்த அவசர கூட்டம் நகராட்சியின் பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து தீர்வுகாண உதவியதாக உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...