கோவை அசோகபுரத்தில் புதிய நியாய விலைக் கடை திறப்பு: எம்.பி. கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார்

கோவை அசோகபுரம் ரங்கம்மாள் காலனியில் புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. எம்.பி. கணபதி ராஜ்குமார் கடையை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சிக்குட்பட்ட ரங்கம்மாள் காலனி ஓம்சக்தி கோவில் வீதியில் புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை கோயம்புத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் இந்த கடை தொடங்கப்பட்டுள்ளது.



கோயமுத்தூர் பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் இந்த கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.



அவர் பூஜைகள் செய்து கடையை தொடங்கி வைத்த பின்னர், ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்க்கரை, பருப்பு, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் கார்த்திக், ஊராட்சித் துணைத் தலைவர் ஆடிட்டர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம், கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் நவீன், திமுக கட்சி நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி செந்தில்ராஜா, ஒன்றிய துணை செயலாளர் அசோக், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் விஜயன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத்து கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதே நாளில், ஆசிரியர் காலனி அரசு பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் முகாமும் தொடங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முகாமை மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் தொடங்கி வைத்தார். இந்த முகாமுக்கான ஏற்பாடுகளை ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம் மற்றும் மாவட்ட பிரதிநிதி செந்தில்ராஜா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...