கோவை துடியலூரில் அதிமுக உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கல்; திமுக உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர்

கோவை துடியலூர் அருகே விஸ்வநாதபுரத்தில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கப்பட்டன. திமுக உறுப்பினர்கள் சிலர் அதிமுகவில் இணைந்தனர். எம்எல்ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



கோவை: கோவை துடியலூர் அருகே விஸ்வநாதபுரத்தில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் துடியலூர் பகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் உரிமை சீட்டுகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்து கொண்டு உறுப்பினர் உரிமை சீட்டுகளை வழங்கினார்.



விஸ்வநாதபுரம் 1வது வட்ட கழக அவைத்தலைவர் செல்வகுமார் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி தலைமை வகித்தார். ஐ.டி விங் மாவட்ட செயலாளர் கேபில் மணிகண்டன், பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரமோகன், 1 வது வட்ட கழக செயலாளர் சாந்திபூசன், 14 வது வட்ட கழக செயலாளர் பந்தல்வீடு பிரகாஷ், 15 மற்றும் 15ஏ ஆவது வட்டக் கழக செயலாளர்கள் சுரேஷ்குமார், சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பி.ஆர்.ஜி.அருண்குமார் பேசுகையில், "வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெற்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அயராது உழைக்க வேண்டும். இதற்காக நமது ஆட்சியில் மக்களுக்காக செய்த நற்பணிகள் குறித்தும், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் ஏமாற்றுவேலைகள் குறித்தும் வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும் பூத்கமிட்டி வேலைகளை சரியாக செய்ய வேண்டும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் திமுக 1வது வார்டு துணை செயலாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர்கள் சவுந்திரராஜ், தனுஷ்குமார் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு பி.ஆர்.ஜி.அருண்குமார் கட்சி சால்வைகளை அணிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் 1வது வட்ட கழக நிர்வாகிகள் முத்து, சண்முகசுந்தரம், செல்வராஜ், மோகன்ராஜ், ரங்கநாதன், நந்தகோபால், ராஜகோபால், பதமநாபன், சம்பத், கணேஷன், ஜீவா, கெளதம், கவிப்பிரியா, தீரவிக்ரமன், 14வது வட்ட கழக நிர்வாகிகள் சி.டி.சி செல்வம், ரமேஷ்குமார், சென்னியப்பன், கலா, விக்னேஷ், மாடசாமி, சிவமூர்த்தி, சிவகுமார், சரவணன், 15 மற்றும் 15 ஏ வட்டகழக நிர்வாகிகள் நடராஜ், நந்தகுமார், ரமேஷ், ராஜேஷ், வீரப்பன், பழனிச்சாமி, கருப்புசாமி, அபிபுல்லா, கணேஷன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...