உடுமலை அருகே பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 19 பேர் காயம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வெங்காயம் அறுவடைக்குச் சென்ற 53 பெண் தொழிலாளர்கள் ஏறிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். 6 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அம்மாபட்டி பிரிவு பகுதியில் பெண் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்த விவரம்:



ஆனைமலை தாலுக்காவைச் சேர்ந்த மாமரத்துப்பட்டி, தென்குமாரபாளையம், கொண்டேகவுண்டன்புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 53 பெண் தொழிலாளர்கள் போடிபட்டி பகுதியில் வெங்காயம் அறுவடைக்குச் செல்வதற்காக ஒரு சரக்கு வாகனத்தில் பயணித்தனர். அம்மாபட்டி பிரிவு பகுதியில் உள்ள ஒரு வளைவான பாதையில் எதிர்பாராத விதமாக வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



விபத்தில் சிக்கிய அனைவரும் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 19 பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் மோசமான காயம் அடைந்த 6 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துச் சம்பவம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...