கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு: காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆய்வு

கோவை பிஆர்எஸ் மைதானத்தில் மாநகர ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.



கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடத்தப்பட்டது.



பிஆர்எஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை மாநகர ஆயுதப்படையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டனர்.



இந்த அணிவகுப்பில் பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

காவலர்களுக்கு உடற்பயிற்சிகள், ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் முறைகள், உடலுக்கு வலு சேர்க்கும் பயிற்சிகள், யோகா மற்றும் அணிவகுப்பு முறைகள் ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...