கோவையில் சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் கல்வி, மருத்துவ வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை: தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி

கோவையில் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் கல்வி, மருத்துவ வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்களை அவர் கோவையில் பேட்டியளித்தபோது வெளியிட்டார்.



கோவை: கோவையில் சிறுபான்மையினர் அதிகம் வாழும் பகுதிகளில் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் முகமது ரஃபி தெரிவித்துள்ளார்.



கோவை ஆத்துப்பாலம் பகுதியில் இயங்கி வரும் ஜீவ சாந்தி அறக்கட்டளை சார்பாக முகமது ரஃபிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.



இந்நிகழ்வில் பேசிய அவர், "இளம் தலைமுறையினர் ஒழுக்கமான கல்வி மற்றும் உயர்ந்த பண்புகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். சமுதாயப் பணிகளில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் அனைத்து சமூக மக்களுக்குமான அரசாக செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், "சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் கரும்புக்கடை, சாரமேடு, ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு வங்கி துவங்க முயற்சி மேற்கொள்ளப்படும். இந்தப் பகுதிகளில் மகப்பேறு மருத்துவமனை துவங்கவும், அரசு ஆரம்பப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தவும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைவில் அதற்கான பணிகள் நடக்க முயற்சி எடுப்பேன்" என உறுதியளித்தார்.

மேலும், இன்றைய தலைமுறை சிறார்கள் தவறான வழியில் பயணிப்பதைத் தடுக்கும் விதமாக, ஏழை எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில், இலவச தற்காப்புக் கலை மற்றும் யோகா பயிற்சிகளை கற்றுத்தர ஆரம்பித்திருப்பதாகவும், இதனை தாம் துவக்கி வைத்து தன்னார்வலர்களை வாழ்த்தியதாகவும் முகமது ரஃபி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...