பல்லடம் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்கள்: எம்பி கணபதி ராஜ்குமார் பங்கேற்பு

கோவை பாராளுமன்ற தொகுதியின் பல்லடம் பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. எம்பி கணபதி ராஜ்குமார் மற்றும் எம்எல்ஏ செல்வராஜ் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.


திருப்பூர்: கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் அறிவொளிநகர், நாதகவுண்டன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றன.



இந்த முகாம்களில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



சுகாதார அலுவலர்கள், ஊராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள், திமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த முகாம்களில் பங்கேற்றனர்.



முகாமில் உரையாற்றிய எம்பி கணபதி ராஜ்குமார், "இந்திய அளவில் பேசப்படும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இங்கு அமல்படுத்தப்படும் திட்டங்களை மற்ற மாநில முதலமைச்சர்கள் கேட்டறிந்து அந்தந்த மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் முப்பதாயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப்படுகிறது. அதனால் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசு," என்று தெரிவித்தார்.



இந்த மருத்துவ முகாம்களில் பொது மருத்துவம், இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் ஆகியவற்றிற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இசிஜி பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.



நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...