கோவை 27வது வார்டில் கவுன்சிலர் அம்பிகா தனபால் திடீர் ஆய்வு

கோவை 27வது வார்டில் குப்பை சேகரிப்பு, மர அரவை, டெங்கு தடுப்பு பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆகஸ்ட் 31 அன்று திடீர் ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.


Coimbatore: கோவை மாநகராட்சியின் 27வது வார்டில் பல்வேறு பகுதிகளில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (ஆகஸ்ட் 31) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது குப்பை சேகரிப்பு, மர அரவை மற்றும் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார்.



பீளமேடு இளங்கோ நகர் பிரதான சாலை மற்றும் பெரியார் வீதி பகுதிகளில் தினசரி குப்பை வாங்கும் தள்ளுவண்டி முறையாக வருகிறதா என்பதை கவுன்சிலர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்போது, பொதுமக்களிடம் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என இரண்டாக பிரித்து வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.



அதேபோல், பாரதி காலனி பிரதான சாலையில் மின்வாரியத்தால் வெட்டப்பட்ட மரங்களை அரவை இயந்திரம் மூலம் தூளாக்கும் பணியையும் ஆய்வு செய்தார். இப்பணியை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விரைவாக முடிக்குமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.



லால் பகதூர் காலனி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளையும் கவுன்சிலர் ஆய்வு செய்தார். இங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டதுடன், ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. மேலும், தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றப்பட்டதையும் உறுதி செய்தார்.

இந்த ஆய்வின் மூலம், வார்டில் சுகாதாரம் மற்றும் தூய்மை பராமரிப்பு பணிகள் சரியாக நடைபெறுவதை உறுதி செய்வதோடு, பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளார் கவுன்சிலர் அம்பிகா தனபால்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...