எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் 'டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2024' கோவையில் நடைபெறுகிறது

கோவையில் உள்ள எஸ்எஸ்விஎம் வேர்ல்டு பள்ளியில் செப்டம்பர் 1 முதல் 3 வரை "டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2024" நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பிரபல பேச்சாளர்கள், போட்டிகள் மற்றும் விருதுகள் வழங்கும் விழா ஆகியவை இடம்பெறுகின்றன.



கோவை: எஸ்எஸ்விஎம் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் 25 ஆண்டுகளுக்கும் மேலான கல்விச் சிறப்பைக் கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வான “டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2024” இன் 3-வது பதிப்பை பெருமையுடன் அறிவிக்கிறது.

கோயம்புத்தூரில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் செப்டம்பர் 1, 2, 3 ஆகிய 3 நாட்கள் இக்கருத்தரங்கு நடக்கிறது. இந்தியாவின் ஒளிர்மிகு அறிவுகளை ஒன்றிணைக்கவும், புதிய கண்டுபிடிப்புகளுக்கான தளமாகவும், பல்வேறு ஒத்துழைப்புகள் மற்றும் இந்திய கல்வியாளர்கள், இளைஞர்களுக்கு ஒரு புத்துணர்வு தருவதாகவும் இது அமையும்.

டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2024, தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறை தலைவர்களின் குறிப்பிடத்தக்க வரிசையை வரிசைப்படுத்தியுள்ளது, அவர்கள் அந்தந்த பாட அறிவையும் நிபுணத்துவத்தையும் மாணவர் சமூகத்துடன் பகிர்ந்து கொள்வார்கள். இவர்களில் விங் கமாண்டர் ராகேஷ் சர்மா (ஓய்வு), டாக்டர். ஆர்.எஸ். சோதி, அமுல் நிறுவனத்தின் முன்னாள் எம். டி., டாக்டர் ஷஷி தரூர், ஷோமா சவுத்ரி, செல்வி. பால்கி சர்மா, டாக்டர். ஸ்ரீமதி கேசன், ஸ்ரீகாந்த் பொல்லா, காவேரி லால்சந்த், அருண் கிருஷ்ணமூர்த்தி, ராகேஷ் ரகுநாதன், துஷ்யந்த் சவாடியா, திமோதி பின்னோ, கீர்த்திகா கோவிந்தசாமி.

எதிர்கால கல்வியின் முன்னேற்றத்துக்கு அரவணைப்போடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் கற்பித்தலின் எல்லையை விரிவாக்கம் செய்து வரும் எஸ்எஸ்விஎம் நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் மணிமேகலை மோகன், இதுகுறித்து பேசுகையில், “டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2024, அறிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டுவதோடு, இந்தியாவின் எதிர்கால தலைவர்களுக்கு புத்துணர்வு ஊட்டும். சுற்றுச் சுழல் பொறுப்புணர்வு மீறல், மனம், உடல், உணர்வு மற்றும் சுற்றுச்சுழலில் அனைத்திலும் உள்ள மீள்தன்மையை உருவாக்கி உண்மையான நிலைத்தன்மையை உணரச்செய்தல் கருத்தாக்கமாக இந்த ஆண்டு மாநாட்டில் இடம் பெறுகிறது. அகில இந்திய அளவிலிருந்து, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் அஸ்ஸாம் போன்ற மாநிலங்களிலிருந்து 250-க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் பங்கேற்கின்றனர். முன்னிலை பெறும் 10 அணிகளளுக்கான போட்டி செப்டம்பர் 2-ல் நடக்கிறது. இதில் வெல்லும் முதல் 3 அணிகளுக்கு முறையே ₹1 லட்சம், ₹75000, ₹50000 ரொக்க பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த பிரிவுகளில் மீள்தன்மையை விரைவுபடுத்துவதால், தற்போதைய சவால்களை எதிர்கொண்டு கடக்க நம்மை தயார் செய்து கொள்வதோடு மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஒவ்வொருவரும் மலர்ச்சி பெற அடித்தளமிடுகிறோம்.

ஒவ்வொரு இந்திய மாநிலத்தில் மட்டுமின்றி, மலேசியா போன்ற சர்வதேச அளவிலும் 500-க்கும் மேற்பட்ட நுழைவுகள் ஊக்கமளிக்கும் குரு விருதுக்கு வந்திருப்பது உண்மையான கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊக்கமளிக்கும் குரு விருதுகள், செப்டம்பர் 3-ல் 25 ஆசியர்களுக்கு வழங்கப்படுகிறது. மாற்றம் தரும் இந்தியாவை உருவாக்க செயலூக்கியாக கல்வியாளர்களுக்கும், கல்வி பயின்றோருக்கும் இந்த கருத்தரங்கின் நோக்கம் உறுதிப்படுத்தும்," என்றார்.

மாணவமுனைவோர் விருதுகள் - எதிர்காலத்தில் வணிகம், கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆராய மாணவமுனைவோர் விருது வழங்கப்படுகிறது. தனித்துவமிக்க இந்த கருத்தரங்கில் பங்கேற்கும் செல்வாக்கு மிக்க பல்வேறு தொழில் துறை தலைவர்களிடமிருந்து மாற்றங்களின் நுணுக்கங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும். மிக முக்கியமாக, மாணவமுனைவோர் விருதுகள், தங்களது யோசனைகளை கண்டறிந்து, தொழில் முனைவோராக ஆரம்ப நிலையிலேயே பயணத்தை துவக்க தூண்டுதலாக அமையும். ஊக்கமிகு நாளை தலைவர்களை உருவாக்கவும், வணிக யோசனைகளை மாணவ பருவத்திலேயே விதைக்கவும் இந்த விருது உதவும். அணியினர் தங்களது யோசனைகளை நடுவர்களிடம் சமர்ப்பிப்பதோடு, அவற்றை செயல்முறை படுத்த முடியுமா என சோதித்து, இளம் தொழில் முனைவோரின் கனவை நனவாக்கவும் ஆலோசனை தருவர்.

ஊக்கம் தரும் குரு விருது - கற்பிக்கும் வழக்கத்தை செறிவுபடுத்திக் கொள்ள கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் தனித்துவமிக்க வாய்ப்பாக இந்த நிகழ்வு அமையும். தொழில்துறையினர், தொழில்முனைவோரின் பேச்சுக்களின்போது ஆசியர்களும், எதிர்கால வேலைவாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு அளிக்க, மதிப்புமிக்க வழிகாட்டுதல்களை அறிய முடியும்.

மாநாட்டின் சிறப்பம்சம்:

• சர்வதேச அளவில் கல்வியின் முன்னேற்றங்கள் மற்றும் கற்பித்தல் நுட்பத்தில் புதுமைகள் குறித்த சிறப்புரைகள்

• எதிர்காலத்தை வடிவமைக்க அயராது உழைக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வை ஊக்கம் தரும் குரு விருது விழா தரும். அவர்களது குறிப்பிடத்தக்க பங்களிப்பை கவனத்திற்கு கொண்டு வர இவ்விருது உதவும்.

டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2024 குறித்து மேலும் விபரங்கள் https://ssvmtransformingindia.com/ இணையத்தளத்தில் அறியலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...