அத்திப்பாளையம் - கீரணத்தம் சாலை அருகே கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த நபர் கைது

கோவில்பாளையம் காவல் துறையினர் அத்திப்பாளையம் - கீரணத்தம் சாலை அருகே கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரக்குமாரை கைது செய்தனர். 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கோவில்பாளையம் காவல் துறையினருக்கு ஆகஸ்ட் 30 அன்று இரகசிய தகவல் கிடைத்தது.

இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவில்பாளையம் காவல் நிலைய காவல் துறையினர் அத்திப்பாளையம் - கீரணத்தம் சாலை அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த வீரா என்கிற வீரக்குமார் (34) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், வீரக்குமாரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கஞ்சா விற்பனை தொடர்பான வழக்குகளில் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...