கோவை பன்னீர்மடையில் திராவிட நட்புக்கழகத்தின் 'நட்பு பாராட்டுவோம்' நிகழ்ச்சி

கோவை பன்னீர்மடையில் திராவிட நட்புக்கழகம் சார்பில் 'நட்பு பாராட்டுவோம்' என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். சாதி, மத பேதமின்றி அனைவரும் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது.



Coimbatore: கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னீர்மடையில் திராவிட நட்புக்கழகம் சார்பில் 'நட்பு பாராட்டுவோம்' என்ற தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திராவிட நட்புக்கழகத்தின் தலைவர் சிங்கராயர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அசன் முகம்மது முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திமுக பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் கலந்துக்கொண்டார்.

திராவிட இயக்கத்தமிழர் பேரவைத் தலைவரும், திராவிட நட்புக்கழகத்தின் நிறுவனரும், தமிழ்நாடு அரசின் சமூக நீதி கண்காணிப்புக்குழுத் தலைவருமான பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், "சாதி மறுப்பாளர்கள், பெண் சமத்துவம் பேணுபவர்கள், எந்தவித மத நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும் திராவிட நட்புக்கழகத்தில் இணைந்து செயல்படலாம்" என்று கூறினார்.



மேலும் அவர், "சாதிமதமற்ற, ஆண் பெண் சமநிலை பேணும் சமத்துவம், வெறுப்பு அரசியலை அகற்றி மதநல்லிணக்கம் பேணுதல், சமூக நீதியை நிலைநாட்டச் செயல்படவேண்டும்" என்று வலியுறுத்தினார். இளைஞர்களை நோக்கி, "சமூக வலைத்தளங்களில் முற்போக்குக் கருத்துகளைப் பதிவிட்டு உலகமெல்லாம் பரப்பவேண்டும். அதுவே தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த தற்போதைய காலத்தின் செயல்பாடாகும்" என்று கூறினார்.



இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சிவக்குமார், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சூரியன் தம்பி, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மு.கனகராஜ், தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பி.டி.கோபால்சாமி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திராவிட நட்புக்கழகம் மாநில துணைப் பொதுச் செயலாளர் விஜயராணி செய்திருந்தார். மண்டல அமைப்பாளர் வழக்குரைஞர் முருகேசன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...