தேவனூர்புதூர், முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை

கோவையில் தேவனூர்புதூர், முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை (செப்.2) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும்.


Coimbatore: கோவையில் தேவனூர்புதூர் மற்றும் முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையங்களில் நாளை (செப்டம்பர் 2) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவனூர்புதூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணாபுரம், ஆண்டியூர், சின்ன பொம்மன்சாலை, பாண்டியன் கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வலையபாளையம், எஸ்.நல்லூர், அர்த்தனாரிபாளையம், புங்கமுத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்துள்ளார்.

அதேபோல், முத்துக்கவுண்டன்புதூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக நீலாம்பூர், அண்ணா நகர், லட்சுமி நகர், குளத்தூர், முத்துக்கவுண்டன்புதூர் ரோடு, பை-பாஸ் ரோடு ஒரு பகுதி மற்றும் குரும்பபாளையம் ஒரு பகுதி ஆகிய இடங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

எனவே, மேற்கூறிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்ளுமாறு மின்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...