கோவை GV ரெசிடென்சி பகுதியில் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு பசுமைப் பூங்காவாக மாற்றப்படும் திட்டம்

கோவை GV ரெசிடென்சி பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டில் இருந்த கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு, அப்பகுதி பசுமைப் பூங்காவாக மாற்றப்படும் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.


Coimbatore: கோவை GV ரெசிடென்சி பகுதியில் அமைந்துள்ள ரிசர்வ் சைட்டில் இருந்த கட்டிட கழிவுகளை அகற்றி, அப்பகுதியை பசுமைப் பரப்பாக மாற்றி அமைக்கும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டப்பணிகளை சிங்கை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், கழக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளருமான மணிசுந்தர் தலைமையில் ஒரு குழு மேற்கொண்டு வருகிறது. இக்குழுவில் மருத்துவர் அணி அமைப்பாளர் பிரதீப், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜவஹர் வெள்ளிங்கிரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



இந்நிலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் நேரில் சென்று இப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், தரமான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



இந்த திட்டம் நிறைவடைந்தால், GV ரெசிடென்சி பகுதி மக்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு இடமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பூங்காவாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பகுதியின் அழகையும் மேம்படுத்தும் என்பதோடு, மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...