வீட்டில் நூலகம் நடத்துவோருக்கு விருது: விண்ணப்பிக்க கோவை ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் வீட்டு நூலகம் நடத்துவோருக்கு விருது மற்றும் பரிசு வழங்க திட்டம். செப்டம்பர் 30க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, வீட்டில் நூலகம் நடத்துபவர்களுக்கான விருது மற்றும் பரிசு பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்களை சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும். இதன் அடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பராமரிக்கப்படும் ஒரு வீட்டு நூலகத்தினை தேர்ந்தெடுத்து, ரூ.3000/- மதிப்பில் விருது, கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வீட்டில் நூலகம் அமைத்து பராமரித்துவரும் புத்தக ஆர்வலர்கள் தங்களது நூலகத்தின் விவரங்களுடன் செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாவட்ட நூலக அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் நூல்களின் எண்ணிக்கை, வகைகள், அரிய நூல்கள் விவரம், நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு மற்றும் தொடர்பு விவரங்களை குறிப்பிட வேண்டும்.

மாவட்ட நூலக அலுவலர், 1232, பெரியகடைவீதி, கோயம்புத்தூர் 641001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பிக்கலாம். மேலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது அருகாமையில் உள்ள பொதுநூலக இயக்க நூலகத்தில் நேரில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...