அன்னூர் சிறப்பு நிலைப்பேரூராட்சியில் நீலகிரி எம்பி ஆ.ராசா பல்வேறு வளர்ச்சி பணிகளைத் தொடங்கி வைத்தார்

கோவை மாவட்டம் அன்னூர் சிறப்பு நிலைப்பேரூராட்சியில் நீலகிரி எம்பி ஆ.ராசா புதிய பேரூராட்சி மன்ற அலுவலகம், தார் சாலை, மின்கல வாகனம், டிப்பர் லாரி மற்றும் மேல்நிலைத் தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளை செப்டம்பர் 1 அன்று தொடங்கி வைத்தார்.


Coimbatore: கோவை மாவட்டம், அன்னூர் சிறப்பு நிலைப்பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செப்டம்பர் 1 அன்று தொடங்கி வைத்தார். புதிய பேரூராட்சி மன்ற அலுவலகம் கட்டுதல், புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள், புதிய மின்கல வாகனம், டிப்பர் லாரி போன்ற புதிய திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அவர் துவக்கி வைத்தார்.

நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மூன்று இடங்களில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆ.ராசா தொடங்கி வைத்தார். வார்டு எண் 9, கண்ணம்மாள் சுப்பையா நகர் பகுதியில் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.



வார்டு எண் 15, காளியாபுரம் பகுதியில் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் மற்றொரு மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 2, அல்லிகுளம் பகுதியில் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் மூன்றாவது மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.



இந்த வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்த பின்னர், நீலகிரி எம்பி ஆ.ராசா வாக்காளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட கழகச் செயலாளர் தொ.ஆ.இரவி, அன்னூர் பேரூராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரன் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...