திமுக முப்பெரும் விழாவில் தேக்கம்பட்டி பாப்பம்மாள் பாட்டிக்கு 'பெரியார் விருது' அறிவிப்பு

திமுக பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டியைச் சேர்ந்த 107 வயது பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டிக்கு 'பெரியார் விருது' வழங்கப்பட உள்ளது. விழா செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் நடைபெறும்.


Coimbatore: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டு கழக முப்பெரும் விழாவில் கோவை மாவட்டம் தேக்கம்பட்டியைச் சேர்ந்த பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டிக்கு 'பெரியார் விருது' வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆண்டுதோறும் கழக முப்பெரும் விழாவில் சிறப்பான பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை நந்தனம் YMCA திடலில் நடைபெறவுள்ள விழாவில் பாப்பம்மாள் பாட்டிக்கு 'பெரியார் விருது' வழங்கப்பட உள்ளது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாப்பம்மாள் பாட்டி 107 வயதாகிறது. இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது திமுக முப்பெரும் விழாவில் 'பெரியார் விருது' வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...