கோவையில் நாளை பாலியல் துன்புறுத்தல் தடுப்பு குறித்த கூட்டம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுப்பது குறித்த கூட்டம் நாளை (செப்.2) நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள், பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுத்து நிறுத்தல் மற்றும் கையாளுதல் தொடர்பான கூட்டம் நாளை (செப்டம்பர் 2) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம் தமிழக அரசின் தலைமை செயலாளரால் காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட உள்ளது. நிர்மலா கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், கலை மற்றும் அறிவியல், பொறியியல், மேலாண்மை, சட்டம், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், அனைத்து தனியார் கல்லூரி முதல்வர்கள், மற்றும் அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை விவாதிக்கவும் உள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்தக் கூட்டம் கருதப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...