கோவையில் மாவட்ட அளவிலான கோ கோ போட்டி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவையில் இரத்தினபுரி கோ கோ கிளப் சார்பாக மாவட்ட அளவிலான கோ கோ போட்டி நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Coimbatore: கோவை இரத்தினபுரி கோ கோ கிளப் சார்பாக மாவட்ட அளவிலான கோ கோ போட்டி, கவுண்டர் மில் பகுதியில் உள்ள புனித ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

போட்டி துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக சென்ட்ரல் எக்சைஸ் மற்றும் ஜிஎஸ்டி சூப்ரிடெண்ட் ஸ்னேகா பிரின்ஸி கலந்து கொண்டு போட்டியைத் துவக்கி வைத்தார். கவுரவ அழைப்பாளராக புனித ஜான் போஸ்கோ பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆயர் பிச்சை ராபர்ட் கலந்து கொண்டார்.



14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என தனித்தனி பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாணவர் பிரிவில் என்.ஜி.ஆர். பள்ளி முதலிடத்தைப் பிடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை ஜான் போஸ்கோ பள்ளியும், மூன்றாம் இடத்தை டி.கே.எஸ். பள்ளியும், நான்காம் இடத்தை மதுக்கரை பிருந்தாவன் பள்ளியும் பிடித்தன.

மாணவிகள் பிரிவில், சுகுணா பிப் பள்ளி முதலிடத்தைப் பிடித்து கோப்பையைக் கைப்பற்றியது. இரண்டாம் இடத்தை விவேக் வித்யாலயா, மூன்றாம் இடத்தை என்.ஜி.ஆர். பள்ளி, நான்காம் இடத்தை கவுண்டம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆகியவை பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகள் மற்றும் சிறந்து விளையாடிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை இரத்தினபுரி கோ கோ கிளப் நிர்வாகிகள் பிரின்ஸ் லீன் ரூபன், பிரகாஷ், மதன் குமார், தர்மபிரபு, கவுதம், ராம்குமார் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...