மேட்டுப்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை முட்டி வீசிய மாடு: வைரலாகும் காணொளி

மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை மாடு முட்டி வீசியது. இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Coimbatore: மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதி சாலைகளில் கால்நடைகள் சுதந்திரமாக உலவி வருவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலை சங்கர் நகரில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மாடு முட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த இந்த சம்பவத்தில், வாகனத்தில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனினும், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவது குறைந்தபாடில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...