வால்பாறை கல்லூரி பாலியல் சீண்டல் விவகாரம்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

வால்பாறை கல்லூரியில் நடந்த பாலியல் சீண்டல் விவகாரம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்தார். நான்கு பேர் கைது செய்யப்பட்டதாகவும், இது போன்ற சம்பவங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Coimbatore: கோவையில் 'போஷன் அபியான்' ஊட்டச்சத்து கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.

வால்பாறை கல்லூரியில் நடந்த பாலியல் சீண்டல் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், பெண்கள் ஆணையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் கல்லூரிக்குச் சென்று சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தார். அந்த விசாரணையில், புகார் சுமத்தப்பட்டவர் இல்லாமல், நான்கு பேர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் DSO அளித்த புகாரின் பேரில் அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கினார். இது போன்ற சம்பவங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், அன்று மாலை 3 மணி அளவில், மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு, அரசு சார்பில் பாலியல் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்கள் காணொளி காட்சி வாயிலாக வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில், இது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் புகார்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் காவல்துறை சார்பில் நகரப் பகுதிகளில் 'போலீஸ் அக்கா' திட்டத்தின் வாயிலாகவும், கிராம பகுதிகளில் 'பள்ளிக்கூடம்' திட்டத்தின் வாயிலாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

நகர காவல்துறை சார்பில், அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளதாகவும், அரசு பள்ளிகளில் வகுப்பறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய ஆட்சியர், இந்த விண்ணப்பங்கள் அனைத்தையும் சேர்த்து 'Safe City' நிர்பயா நிதியின் கீழ் விண்ணப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இறுதியாக, இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், சம்பவங்கள் நடைபெறும் பட்சத்தில் அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...