துடியலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய வட மாநில வாலிபர் கைது

கோவை துடியலூர் பகுதியில் இரண்டு நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி, போக்குவரத்துக்கு இடையூறு செய்த வட மாநில வாலிபர் பொதுமக்கள் உதவியுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Coimbatore: கோவை துடியலூர் வெள்ளகிணறு பிரிவு பகுதியில் மேட்டுப்பாளையம் மெயின் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வாலிபர் அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி நின்றும், மெயின் ரோட்டில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தியும், போக்குவரத்துக்கு இடையூறு செய்து வந்தார். மேலும், அந்த பகுதியில் உள்ள கடைகள் முன்புறம் தள்ளுவண்டி கடைகளில் வண்டிகளை தள்ளியும், பானைகளை உடைத்தும் அச்சுறுத்தலில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 1) பொதுமக்களின் உதவியுடன் துடியலூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மனநல மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் துடியலூர் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. போலீசாரின் துரித நடவடிக்கையால் பிரச்சினை தீர்க்கப்பட்டது பொதுமக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...