பொள்ளாச்சி: இலவச வீட்டு மனையை அபகரித்த அண்ணன் மீது நடவடிக்கை கோரி சார் ஆட்சியரிடம் பெண் புகார்

பொள்ளாச்சி அருகே, அரசு வழங்கிய இலவச வீட்டு மனையை அபகரித்ததாக கூறப்படும் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பெண் ஒருவர் சார் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.



Coimbatore: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், ஆனைமலை வட்டம் தென்குமாரபாளையத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண், தனது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

பார்வதியின் கூற்றுப்படி, 1996 ஆம் ஆண்டு அரசு அவருக்கு இலவசமாக இரண்டு சென்ட் நிலம் வழங்கியது. கணவரை இழந்த நிலையில், அந்த இடத்தில் வீடு கட்ட முயன்றபோது, அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். விசாரித்தபோது, அவரது அண்ணன் முத்துசாமியும், தென்குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவரான திமுகவைச் சேர்ந்த அவரது மகன் நாராயணமூர்த்தியும் போலியான ஆவணங்கள் தயாரித்து, கோமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரியவந்தது.



பார்வதி மேலும் கூறுகையில், தனது ஆதார் மற்றும் போலி கைரேகையைப் பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், அவரது அண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காவல்துறை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

ஊராட்சி மன்ற தலைவர் நாராயணமூர்த்தி, தாங்கள் ஆளுங்கட்சியாக இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என மிரட்டுவதாகவும் பார்வதி தெரிவித்தார். இந்நிலையில், போலி பத்திரப்பதிவு செய்து வீட்டு மனையை அபகரித்த தனது அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்தார்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...