உடுமலை மளிகைக் கடையில் நூதன முறையில் திருட்டு: சிசிடிவி காட்சிகள் வைரல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மளிகைக் கடையில் இருவர் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டனர். சுமார் 8,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டன. சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சத்திரம் வீதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் நூதன முறையில் திருட்டு நடந்துள்ளது. இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் நடந்த நேரத்தில், கடை உரிமையாளர் புதிதாக வந்த சரக்குகளை சரிபார்க்க வெளியே இறக்கி வைத்திருந்தார். கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், உரிமையாளரும் பணியாளரும் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இரண்டு நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர்.



முதலில் ஒருவர் அருகிலுள்ள பேன்சி கடைக்குச் சென்றார். பின்னர் செல்போனில் பேசுவது போல் நடித்து மளிகைக் கடைக்கு வந்து, அங்கிருந்த பெட்டியை எடுத்து பேன்சி கடைக்கு முன் வைத்தார். பின்னர் மற்றொருவரை அழைத்தார். அவர் வந்ததும், முதல் நபர் பேன்சி கடைக்குள் சென்று கடைக்காரருடன் பேச்சுக் கொடுத்தார். இதையடுத்து இரண்டாவது நபர் பலசரக்கு பெட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

திருடப்பட்ட பெட்டியில் சுமார் 8,000 ரூபாய் மதிப்புள்ள சூடம் மற்றும் பெருங்காய டப்பாக்கள் இருந்ததாகத் தெரிகிறது. கடந்த சில மாதங்களாக உடுமலை பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால், இது குறித்து உடுமலை காவல்துறையினர் விசாரணை செய்து, திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...