அமாவாசையை முன்னிட்டு ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.



அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிந்தனர். கோவிலின் கொடிமரம் அருகே தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர்.



மேலும், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியும், பில்லி சூனியம் போன்றவற்றில் இருந்து விடுபட வேண்டியும் நீதி கல்லில் மிளகாய் அரைத்து பூசி வழிபாடு செய்தனர்.



கோவில் நிர்வாகம் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், பாதுகாப்பு நலன் கருதியும் தடுப்புகள் அமைத்துள்ளது. கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...