உடுமலையில் எம்.பி அலுவலகம் மூடல்: பொதுமக்கள் ஏமாற்றம்

உடுமலையில் பொள்ளாச்சி எம்.பி அலுவலகம் திறந்து சில மாதங்களிலேயே மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் ஈஸ்வரன் அலுவலகம் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உடுமலைப்பேட்டை வ.உ.சி. வீதியில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரன் அவர்களின் தேர்தல் வாக்குறுதியின்படி பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக அலுவலகம் திறக்கப்பட்டது.

ஆனால் தற்போது அலுவலகம் மூடப்பட்டுள்ளது. இதனால் தங்கள் குறைகளை தெரிவிக்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எம்.பி. அலுவலகத்தில் பணியாளர்களை நியமித்து, அலுவலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...