அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்: பதிவு பணிகள் பாதிப்பு

கோவை மாவட்டம் அன்னூரில் தொழில் பேட்டை அமைக்க நில கையகப்படுத்தல் எதிர்ப்பில் விவசாயிகள் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.


கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன.

கோவை மாவட்டம் அன்னூர் தாலுகாவில் நான்கு ஊராட்சிகளும், மேட்டுப்பாளையம் தாலுகாவில் இரண்டு ஊராட்சிகளும் உள்பட மொத்தம் ஆறு ஊராட்சிகளில் 3,850 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை அமைப்பதாக 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் அறிவித்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படமாட்டாது என தமிழக அரசு அறிவித்தது. இருப்பினும், கடந்த வாரம் மூன்று நாட்கள் பத்திரப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தை அடுத்து மீண்டும் கடந்த வெள்ளிக்கிழமை பத்திரப்பதிவு துவங்கியது.



இந்நிலையில், சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அன்னூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று (செப்டம்பர் 2) விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனால் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 50 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...