கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் ஜோதிபுரத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. கோவை எம்பி கணபதி ராஜ்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஜோதிபுரத்தில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள் இன்று (செப்டம்பர் 2) தொடங்கின. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் வெ. விஸ்வ பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை எம்பி கணபதி ராஜ்குமார், பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், வார்டு கவுன்சிலர்களான சாந்தாமணி, வளர்மதி, கமலவேணி, பாலகிருஷ்ணன், தேவகி, அம்பிகா மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...