சூலூர் அருகே இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு மீட்பு

கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் ஒரு இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. பாம்பு பிடி வீரர் சஜீஸ் பாம்பை மீட்டு காட்டில் விடுவிக்க உள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் ஒரு போட்டோ ஸ்டுடியோ முன்பு சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் அரிய வகை மண்ணுளிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

தினேஷ் என்பவர் தனது வாகனத்தில் பெட்ரோல் உள்ளதா என்று பார்க்க ஸ்கூட்டரின் டேங்கைத் திறந்த போது அங்கு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் அருகில் இருந்த பாம்பு பிடி வீரர் சஜீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சஜீஸ், இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அவர் அந்த பாம்பு அரிய வகை மண்ணுளிப் பாம்பு என்று தெரிவித்தார். இந்த வகை பாம்பின் வால் பகுதியும் தலை போன்று இருப்பதால், இரண்டு தலை உள்ள பாம்பு என்றும் அழைக்கப்படுகிறது என்றார்.

மேலும், இந்த பாம்பு விஷத்தன்மை அற்றது என்றும், மருத்துவ நோக்கங்களுக்காக சிலர் இதை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் சஜீஸ் விளக்கினார். பிடிபட்ட மண்ணுளிப் பாம்பை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த காட்டில் விடுவிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...