வருடத்திற்கு இருமுறை முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை பெற வேண்டும்: கோவையில் கார்த்திக் சிதம்பரம் கருத்து

கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்திக் சிதம்பரம் எம்.பி., முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள், சென்னை பார்முலா 4 கார் பந்தயம், கூவம் நதி சுத்திகரிப்பு குறித்து கருத்து தெரிவித்தார்.



Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடை மதுராநகர் பகுதியில் வசிக்கும் காங்கிரஸ் நிர்வாகி மோகன் ராஜ் - கவுசல்யா தம்பதியினரின் மகன் சத்தியசீலன் - பிரீத்தி ஆகியோரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் வெளிநாடுகளில் சென்று முதலீடு பெறுவது ஒரு தேவையான ஒன்று. வருடத்திற்கு இரண்டு முறை, மூன்று முறை கூட சென்று முதலீடு பெறலாம். அதை நான் வரவேற்கிறேன். இதனால் பல வேலை வாய்ப்புகளை உருவாக்க வாய்ப்புள்ளது," என்றார்.



சென்னையில் நடைபெறவுள்ள பார்முலா 4 கார் பந்தயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், "சென்னையில் கார் ரேஸ் போன்ற நிகழ்ச்சி நடத்துவதால், சென்னை மாநகரம் உலக அளவில் தெரியப்படுத்தக்கூடிய பகுதியாக அறியப்படுகிறது. அதை நான் வரவேற்கிறேன்," என்று கூறினார்.

கூவம் நதி சுத்திகரிப்பு பணிகள் குறித்து பேசிய கார்த்திக் சிதம்பரம், "கூவம் நதியை சுத்தப்படுத்துவதாக பல கோடி ரூபாய் செலவு செய்ததாக சென்னை மேயர் தனது செய்தியில் கூறியுள்ளார். அதற்கு நான் முழுமையான வெள்ளை அறிக்கையை கேட்டுள்ளேன். அதில் செலவிடப்பட்ட தொகை சரியானதா, தூய்மை செய்தும் ஏன் தூய்மை அடையவில்லை, அதற்கான காரணம் என்ன, அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நான் கேட்டுள்ளேன்," என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ்நாட்டில் தமிழ் மொழி திணிக்கப்படுவதில்லை என்றும் கார்த்திக் சிதம்பரம் குறிப்பிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...