ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் போலி பெண் காவலர் கைது

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் அமாவாசை தினத்தன்று போலி காவலர் உடையணிந்து பணிபுரிந்த பெண் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 34 வயது பெண் காவல்துறை மீதான ஆர்வத்தால் இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.


Coimbatore: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் போலி காவலர் உடையணிந்து பணிபுரிந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நேற்று திங்கள்கிழமை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் அங்கு போலீசார் பாதுகாப்பு பணியிலும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், விஐபிக்கள் வரிசையில் முதல் நிலை காவலர் உடையணிந்த பெண் ஒருவர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பணியில் இருந்த ஆனைமலை போலீசார் அந்தப் பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலி காவலர் என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்தப் பெண் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரீத்தா (34) என்பது தெரியவந்தது. மேலும், காவல் பணியின் மீதுள்ள ஆர்வத்தினால் காவல்துறை உடை அணிந்து பணிபுரிந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் போலி காவலர்கள் செயல்படுவது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், இது போன்ற சம்பவங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...