கேஎம்சிஹெச் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சையில் புதிய சாதனை: தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சிஏஆர்டி தெரபி

கோவையின் கேஎம்சிஹெச் மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சையில் புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான சிஏஆர்டி தெரபி சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.



கோவை: கேஎம்சிஹெச் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சையில் புதிய சாதனை படைத்துள்ளது. முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனை நோயாளிகள் பலன்பெறும் நோக்கத்துடன் உலகின் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. அந்த வகையில் தற்போது புற்றுநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் ஒரு புதிய மருத்துவமுறையை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பிடத்தக்க கிளினிகல் ஆராய்ச்சியும் நிபுணத்துவமும் தேவைப்படும் சிஏஆர்டி தெரபி (CAR-T) என்ற இந்த சிகிச்சை முறையை இந்தியாவில் அளிக்கும் ஒரு சில மருத்துவமனைகளில் கேஎம்சிஹெச் மருத்துவமனையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கேஎம்சிஹெச் மருத்துவமனையானது இந்த புதிய சிஏஆர்டி சிகிச்சையை மூன்று முறை செய்துள்ளதும் இது தமிழ்நாட்டிலேயே அதிக அளவிலான சிஏஆர்டி தெரபி என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி மற்றும் சமீப காலமாக டார்கெட்டட் தெரபி, இம்யூனோதெரபி ஆகிய சிகிச்சை முறைகளே புற்றுநோய்க்கான பிரபல சிகிச்சை முறைகளாக இருந்துவருகின்றன. கடந்த பத்து வருடங்களாக இம்யூன் மாடுலேட்டிங் தெரபி என்ற சிகிச்சைமுறையும் தனிக்கவனம் பெற்றுவருகிறது. நோயாளிகளின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரித்து புற்றுநோய் செல்களை அழிப்பதே இந்த முறையின் சிறப்பாகும். புற்றுநோய் முற்றிய நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு கூட இந்த முறை சிறந்த பலனைத் தருவதாய் அமைந்துள்ளது. இவைகள் ஒருபுறமிருக்க, தற்போது சிஏஆர்டி என்ற புதிய வகை இம்யூனோதெரபியானது புற்று நோய் சிகிச்சை நிபுணர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. இரத்தப் புற்றுநோய் மற்றும் நிணநீர்ச் சுரப்பி புற்றுநோய் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோய் செல்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் பல வருடங்களாக அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய ஆற்றல் இதன் தனிச்சிறப்பாகும்.

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிஏஆர்டி சிகிச்சை முறையில் பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலில் இருந்து டி-செல்கள் தனிமைப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. பிறகு அவை மரபணு மாற்றம் செய்யப்படுகின்றன. நோயாளியின் உடலில் செலுத்தப்படும் இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி-செல்கள் பல்கிப் பெருகி புற்று நோய் செல்களை அழிக்கின்றன. கேஎம்சிஹெச் மருத்துவமனையில் இந்த சிகிச்சை முறையானது ஒவ்வொரு நோயாளியின் உடல் நிலைக்கேற்றவாறு பிரத்யேகமாக அளிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் இந்த முறை சிகிச்சைக்கு அதிக செலவாகும். தற்போது சிஏஆர்டி தெரபியானது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு அளிக்கப்படுவதால் சிகிச்சைக்கான செலவு கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. லூகோமோ, லிம்போமோ மற்றும் மைலோமா முதலான இரத்தப் புற்று நோய்களுக்கு தற்போது பரவலாக அளிக்கப்பட்டு வரும் இந்த அகிச்சை முறையை இதர வகை புற்றுநோய்களுக்கும் விரிவுபடுத்தி பயன்படுத்துதற்காக ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.



கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தமிழ்நாட்டில் அதிக அளவிலான சிஏஆர்டி தெரபி செய்து சாதனை புரிந்த கேஎம்சிஹெச் புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கு தனது பாராட்டுதல்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். பல்வேறு புதுமையான மருத்துவத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் உள்ள கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு இப்புதிய சிகிச்சை முறையும் அதில் புரிந்துள்ள சாதனையும் நோயாளிகளுக்கு உலகத்தரமான சிகிச்சை வசதிகளை அளிப்பதில் கேஎம்சிஹெச் கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு ஒரு நற்சான்றாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இப்புதிய சிகிச்சை முறை மூன்று நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பலனளித்துள்ளது என்றும் அதன் மூலம் கேஎம்சிஹெச் மருத்துவமனை புற்றுநோய் மருத்துவத்தில் தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங்குவதாகவும் கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தெரிவித்தார். இரத்தப் புற்றுநோய்களால் மீண்டும் பாதிக்கப்படும் நோயாளிக்கு இது மிகவும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் மருத்துவமுறையாகும். அதுமட்டுமல்லாது நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் அதிநவீன சிஏஆர்டி தெரபி பற்றிய மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 7339333485.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...