கோவை எம்பி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்

கோவை இராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 63 மாணவிகளுக்கு கோவை எம்பி டாக்டர் கணபதி.ப.ராஜ்குமார் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண்.63க்குட்பட்ட இராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கணபதி.ப.ராஜ்குமார் 63 எண்ணிக்கையிலான விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு வழங்கினார். மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் IAS, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகர கல்வி அலுவலர் குணசேகரன், உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...