கோவை பூலுவபட்டி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

பூலுவபட்டி பேரூர் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செப்டம்பர் 15ஆம் தேதி முப்பெரும் விழா குறித்து விவாதிக்கப்பட்டது.


கோவை: பூலுவபட்டி பேரூர் கழக திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இக்கூட்டம் பேரூர் கழக செயலாளர் சின்ராஜ் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ள முப்பெரும் விழாவை முன்னிட்டு அனைத்து வார்டுகளிலும் கொடியேற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



மேலும், இக்கூட்டத்தில் தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பன் (எ) சாமிபையன், கோவை வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக செயலாளர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...