கோவை கோவில்பாளையத்தில் 1.200 கிலோ கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது

கோவை கோவில்பாளையம் விஸ்வாசபுரம் அருகே போலீசார் ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


கோவை: கோவை கோவில்பாளையம் விஸ்வாசபுரம் அருகே போலீசார் இன்று (செப்டம்பர் 3) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதி வழியாக வந்த இளைஞர்கள் இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் அவர்கள் தீபக்குமார் (19) மற்றும் சிந்து ஜான் (21) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் 1.200 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...